என் வயதில் பதினைந்து
வருடங்கள் பின்னோக்கி
சென்றது போல்
ஒரு உணர்வு
எண்ணம் புரியாத
ஒரு குதூகலிப்பு
முகத்தில் அகலாத
ஒரு புன்சிரிப்பு
இமைக்க மறந்தேன்
கணினியில் உன் சிரிப்பை
கண்ட தருணத்தில் இருந்து,
தனிமையின் பெருமை
அறிந்தேன்
இதயத்தின் படபடப்பு
உணர்ந்தேன்
எங்கோ எட்டா உயரத்தில்
நீ இருந்தாலும்
அருகில் அமர்வாயா
என்று ஒரு ஏக்கம்
அந்த புன்முறுவல் தருவாயா
என்று ஒரு ஆசை
கண்களின் காந்தம்
உன் மொழியின் அழகு
தேர்ந்த பல்வரிசை
ஈர்த்ததடா என்னை
இதயத்துடிப்பு வேகத்தில்
இடி முட்டியது விண்ணை
புயல் போன்ற இந்த
உணர்வுகள்
ஒத்தி வைக்க
முயல்கிறேன்
என் பணிகளில்
மனம் செலுத்த
அல்லல் படுகிறேன்
வேண்டாம் இனி
உன் திரைப்படங்கள்
வேண்டாம் இந்த
இளம்பருவத்து இன்னல்கள்
கடமைகளும் எதிர்பார்ப்புகளும்
அலைக்கழித்துக் கொண்டிருக்கும்
வேளையில் இந்த சிறு மாற்றம்,
வியர்க்கும் கடும் வெயிலில்
வரும் சில்லென்ற கோடை மழை
தாகத்தில் தவிக்கும் பயணிக்கு
தரும் ஒரு கோப்பை குடிநீர்
இந்த சிறு மகிழ்ச்சிக்கு
ப்ரேமம் கலந்த நன்றி,
உன்னால் ஈர்க்கப்பட்ட
ஆயிரம் "மலர்"களின் சார்பாக! :-)
Dedicated to all Premam fans and to the one and only Nivin Pauly :-)
வருடங்கள் பின்னோக்கி
சென்றது போல்
ஒரு உணர்வு
எண்ணம் புரியாத
ஒரு குதூகலிப்பு
முகத்தில் அகலாத
ஒரு புன்சிரிப்பு
இமைக்க மறந்தேன்
கணினியில் உன் சிரிப்பை
கண்ட தருணத்தில் இருந்து,
தனிமையின் பெருமை
அறிந்தேன்
இதயத்தின் படபடப்பு
உணர்ந்தேன்
எங்கோ எட்டா உயரத்தில்
நீ இருந்தாலும்
அருகில் அமர்வாயா
என்று ஒரு ஏக்கம்
அந்த புன்முறுவல் தருவாயா
என்று ஒரு ஆசை
கண்களின் காந்தம்
உன் மொழியின் அழகு
தேர்ந்த பல்வரிசை
ஈர்த்ததடா என்னை
இதயத்துடிப்பு வேகத்தில்
இடி முட்டியது விண்ணை
புயல் போன்ற இந்த
உணர்வுகள்
ஒத்தி வைக்க
முயல்கிறேன்
என் பணிகளில்
மனம் செலுத்த
அல்லல் படுகிறேன்
வேண்டாம் இனி
உன் திரைப்படங்கள்
வேண்டாம் இந்த
இளம்பருவத்து இன்னல்கள்
கடமைகளும் எதிர்பார்ப்புகளும்
அலைக்கழித்துக் கொண்டிருக்கும்
வேளையில் இந்த சிறு மாற்றம்,
வியர்க்கும் கடும் வெயிலில்
வரும் சில்லென்ற கோடை மழை
தாகத்தில் தவிக்கும் பயணிக்கு
தரும் ஒரு கோப்பை குடிநீர்
இந்த சிறு மகிழ்ச்சிக்கு
ப்ரேமம் கலந்த நன்றி,
உன்னால் ஈர்க்கப்பட்ட
ஆயிரம் "மலர்"களின் சார்பாக! :-)
Dedicated to all Premam fans and to the one and only Nivin Pauly :-)