கரையை தொட்டுச் செல்லும் அலையே

என்ன சேதி கொண்டு வந்தாய் எனக்கு
என்னை ரசிக்கும் உனக்கு பரிசுகள்
பல கொண்டு வந்தேன் தொலைதூரத்திலிருந்து
உன்னிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை
உன் புதிர் மொழியின் அர்த்தம் தேடும் வேளையில்
எதிர்பாரா நேரத்தில் உன் கண்களின் பிரகாசத்தை
உணர இதோ கொண்டு வந்தேன் ஆழ்கடல் சிற்பிகள்
எத்தனை அழகு எத்தனை வடிவம்
என் சமர்ப்பணம் இந்த அதிசய சிற்பிகளுக்கு
வெள்ளை கூடை கொண்டு சேர்த்த
பல வண்ண பூக்கள்

தொட்டு எடுத்த என் கைகளும்
நிறம் மாறிய அற்புதங்கள்
ஆதவன் மறையும் வேளையில்
மேகக்கூட்டம் ஆடும் நடனங்கள்
அமைதியான இந்த தருணத்தை
எடுத்து செல்ல முயலும் வார்த்தைகள்
தென்றல் தீண்டிய என் கூந்தல்
கவிதை எழுத துடிக்கிறதே
அதை கட்டுப்படுத்தும் என் கைகளும்
போராடி களைக்கிறதே
காற்று திசை நோக்கிச் செல்ல
கால்கள் இரண்டும் பறக்கிறதே
மேகத்தின் உள்ளே நீந்திட
என் மனமும் அலை பாய்கிறதே