I hope all those rash drivers who only know to honk and cause chaos on the roads because of their impatient and arrogant attitude are reading this poem.
பொறுமை இழந்த மனிதா
எதற்காக இத்தனை அவசரம்
இரவுநேர அமைதிப்பொழுதில்
எதற்காக ஒலி எழுப்புகிறாய்
நடந்து சோர்ந்த கால்கள்
ஓய்வு கேட்கவில்லையா?
வேலை செய்யாத கைகள்
சுறுசுறுப்பாகி விட்டனவா?
பகுத்தறிவு இழந்த மனம்
கல்வியால் மாறிவிடாது
எறும்புகள் கடைபிடிக்கும் குணம்
எக்காரணத்தாலும் மறைந்து விடாது
பொறுமை ஒருநெல்லிக்கனி
அதன் விளைவுகள்
ஒரு நிமிடத்தில்
கறைவதில்லை
ஒரு நொடி வேகத்தால்
ஒரு வாழ்வை
இருட்டி விடாதே!
ஒரு அலை கோபத்தால்
உன்னை நீ
இழந்து விடாதே!
A rough translation in English
The one who has lost patience
Why you are in such a hurry?
Is there a reason to honk
in this quiet, peaceful night?
Doesn't your swollen feet
demand you for some rest?
or does your inactive hands
want to be busy?
Your mind with no common sense
will not change with your education
The discipline followed by ants
will never change for any reason
Patience is like a gooseberry
It's effects
doesn't vanish
in a minute
Let your one second of speed
not darken another's life
Let your one splash of anger
not make you lose yourself