ஆயிரம் ஆயிரம்
உயிரினங்கள்
கடலுக்குள்
மனிதனுடன் பேச
ஆவலாய்!
தன் கூட்டத்தை
விட்டு வெளியே
வர இயலாமை,
புது சூழ் நிலையை
தட்ப வெட்பத்தை தாங்க
சக்தி இல்லாமை.
எனவே விடுகின்றன
கிளிஞ்சல் விடு தூது.
பல நிறம்
பல வகை
பல வடிவம்
ஆயினும் ஒவ்வொன்றுக்கும்
உள்ளது தனித்துவம்.
கடல் அலை கொண்டு
வ ந்து சேர்த்தது
என் காலடியில்.
சிலவற்றை எடுத்தேன்
என் கைகளில்
பலவற்றை பார்த்தேன்
கால் சுவடுகளில்
அழகின் உதாரணம் இவை
எளிமையின் இலக்கணம் இவை
பரந்து விரிந்த
பாற்கடலின் துளிகள் இவை
A rough translation in English
Seashell message
Thousands of
creatures
beneath the ocean
waiting to talk
to mankind!
Unable to come out
of their herd,
Unable to withstand
the pressures of
new environment.
Hence sending a
message through
seashells.
Different colours
Different types
Different shapes
But unique
in it's own way.
Waves brought
them closer to me
I took some
in my hands,
I saw many
in the footprints.
An example of beauty
An icon of simplicity,
They represent the
vastness of the majestic ocean.
Dec 4, 2006
Blog Archive
All contents copyrighted by Anuradha Sridharan, 2023. Don't copy without giving credits. Powered by Blogger.