Wrote this poem while returning home from work last night and heavy rains lashing the city
விரைந்து வருகிறாய்
பூமித்தாய்க்கு முத்தமிட
திரண்டு ஓடுகிறாய்
வெள்ளாற்றில் கலக்க
நீ தொடும் வேளையில்
மண்ணிற்கு புது வாசனை
எனக்குள் பொங்கும்
மங்காத ரசனை
மேகக்கூட்டங்கள்
உன்னை வரவேற்கும்
கதிர் வீசும் சூரியனும்
வெட்கத்தில் மறையும்
மின்னல் சிரிப்பில்
நீ பிரகாசிப்பாய்
இடி முழக்கத்தில்
நீ எதிரொலிப்பாய்
உன்னால் குளிரும்
உயிர்கள் உள்ளம்
உன்னால் விளையும்
பயிர்கள் செல்வம்
உன்னை கரம்பிடிக்க
என் கண்கள் காத்திருக்க
வந்தாய் நீ மழையே
தந்தாய் புது இசையே
A rough English translation
Welcome !
You reach quickly
to kiss mother nature
You flow swiftly
to reach the river
The moment you touch
The soil exudes a new smell
Blossoming in me
a never-ending admiration
Clouds gather
to welcome you
The bright sun
sets blushed
A lightning smile
for you to glow
A thunder blast
for you to echo
You cool
the soul of lives
You create
the wealth of crops
My eyes wait
to capture you
Here you come, Oh rain
Here you give, new music