மழையே சிறு துளி மழையே
சில பல ரகசியங்கள் சொல்லவா
என் காதலை பற்றி
காதல் பிற ந்தது எவ்வாறு
தெரியவில்லை எனக்கு
காதல் வளர் ந்தது எவ்வாறு
புரியவில்லை எனக்கு
கேட்டேன் அவன் குரலை
அமைதி தெரி ந்தது
பார்த்தேன் அவன் கண்களை
தெளிவு தெரி ந்தது
இதயத்தை கொடுத்தேன்
என் இதயம் அறியாமல்
தனிமையில் தேடினேன்
என் கண்கள் அறியாமல்
தன்னந்தனியே சிரித்தேன்
தூக்கத்தில் உளறினேன்
தோழிகள் பார்த்தனர்
ஏளனம் செய்தனர்
தட்டு எடுத்தேன்
உண்ண முடியவில்லை
கண்கள் அயர்ந்தேன்
உறங்க முடியவில்லை
தெரிந்தும் தெரியாதது போல் நடித்தான்
செல்ல பெயர் வைத்தேன்
புரிந்தும் புரியாதது போல் சென்றான்
கண்களில் காதலை காட்டினேன்
மனம் விட்டு பேசினோம்
ஒவ்வொரு நாளும்
நினைத்து நினைத்து சிரித்தோம்
ஒவ்வொரு நொடியும்
தயக்கமில்லாமல் சொன்னான்
அவன் காதலை
மறுப்பில்லாமல் சொன்னேன்
என் காதலை
காதல் கவிதை எழுதி
தீர்த்து விட்டார்கள் கவிஞர்கள்
என்று நினைத்தேன்
"போடி பைத்தியக்காரி,
கவிதை எழுத எழுத
கவிஞர் பிறப்பார்"
என்று உணர்த்தினான்
ஆம்! கவிஞியாக பிறந்தேன்
முதல் முறையாய்
கூறினேன் என்
காதல் பரிமாணங்களை
மழையே உனக்கு
முதல் முறையாய்
This poem has been lying in my drafts for more than a year now. I posted a part of it in 2005 typed in English and this is the complete version in Tamil. This is one poem very close to my heart.
A rough translation in English
Oh rain!
Tiny droplets of rain
Would you like to hear
some secrets about my love?
I don't know
when love was born
I don't understand
how love has grown
I heard his voice
I sensed peace
I looked at his eyes
I sensed clarity
I gave my heart
The heart doesn't know
I searched for it
My eyes didn't find
I laughed at myself
My sleep was disturbed
My friends looked at me
and teased me.
I took hold of my plate
but I couldn't eat
My eyes felt drowsy
but I couldn't sleep
He acted as if
nothing was happening
I gave him a nick name
He walked away as if
nothing was to be understood
my eyes revealed my love
We spoke from
our hearts everyday
We laughed together
every second
He conveyed his love
for me with no hesitance
I conveyed my love
for him with no resistance
love poems are all written
by poets, I assumed
"oh you fool! poets are made
with more and more new poems",
he made me realize.
Yes, I was born as
a poetess today,
narrating my phases of
love for the first time,
oh dear rain!
Mar 2, 2007
Blog Archive
All contents copyrighted by Anuradha Sridharan, 2023. Don't copy without giving credits. Powered by Blogger.